ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இதில் கே.எஸ்.ரவிகுமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ப்ரீத்தி பகதாலா நடிக்கிறார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் இவர், தெலுங்கில் பதங், 418 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தை வசந்த் விஜய் எம்.பி., சண்முக பிரியன் இணைந்து தயாரிக்கின்றனர். பர்வீன் பானு இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். “உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது” என படக்குழு தெரிவித்து உள்ளது.

