அஜித் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’

Priya
552 Views
1 Min Read

நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். ‘ஏகே64’ என அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது. அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தடைகளை உடைத்து, லட்சக்கணக்கானோருக்கு ஊக்குவித்து, நட்சத்திர அந்தஸ்துக்கான இலக்கணத்தை மாற்றியமைத்த 34 ஆண்டு கால பயணம். 
விருப்பம், விடாமுயற்சி, ஈடு இல்லாத வசீகரத்தால் கட்டமைக்கப்பட்டது இந்தப் பயணம். ‘டேர் டேவில்’ இங்கே இருக்கிறது. இது சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி அஜித் சார்… நன்றி தயாரிப்பாளர் ஷாலினி மேடம், அனிருத் சார்’ என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply