கிராமப்புறங்களில் எல்பிஜி முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பு

Priya
692 Views
1 Min Read

கி​ராமப்​புறங்​களில் சமையல் எரி​வாயு சிலிண்​டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்​களில் இருந்து 25 நாட்​களாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், நகர்ப்​புறம் மற்​றும் கிராமப்புறம் என அனைத்து பகு​தி​களி​லும் எல்பிஜி சிலிண்​டரை 25 நாட்​களுக்கு ஒரு​முறை முன்​ப​திவு செய்ய முடி​யும்.

ஈரான் போரின் காரண​மாக, ஹார்​முஸ் நீரிணை வழி​யாக போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டு, எல்​பிஜி விநி​யோகத்​தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்​து, நகர்ப்​புறங்​களில் சிலிண்​டர் முன்​ப​திவு 25 நாட்​களுக்கு ஒரு​முறை​யும், கிராமப்​புறங்​களில் 45 நாட்​களுக்கு ஒரு​முறை​யும் முன்​ப​திவு செய்​யும் நடை​முறை கொண்டுவரப்பட்டது.

பின்​னர், எல்​பிஜி விநி​யோகம் சீரடைந்​ததையடுத்​து, நகர்ப்புறங்களில் சிலிண்​டர் முன்​ப​திவு 25 நாட்​களுக்கு ஒரு​முறை என்ற நடை​முறை தளர்த்​தப்​பட்​டது. அதேசம​யம், கிராமப்புறங்களில் 45 நாட்​களுக்கு ஒரு​முறை என்ற நடை​முறை தளர்த்​தப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், கிராமப்​புறங்​களி​லும் சமையல் எரி​வாயு சிலிண்​டர் முன்​ப​திவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்​களாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, மத்​திய பெட்​ரோலி​யம், இயற்கை எரி​வாயு துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தனது முகநூல் பதி​வில், “தற்​போது எல்​பிஜி விநி​யோக நிலைமை மேம்​பட்​டுள்​ளதுடன், நிலுவை​யில் இருந்த சிலிண்​டர் முன்​ப​திவு​களின் எண்ணிக்கையும் கணிச​மாகக் குறைந்​துள்​ளது. இதையடுத்​து, இந்​தக் கட்டுப்பாட்டை மத்​திய அரசு தளர்த்​தி​யுள்​ளது. இனி நகர்ப்புறம், கிராமப்​புறம் என்ற வேறு​பாடின்றி அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்​வோரும் 25 நாட்​களுக்கு ஒரு​முறை சிலிண்டர் முன்​ப​திவு செய்​ய​லாம்” என தெரி​வித்​துள்​ளார்.

மேலும், இந்த மாற்​றத்தை உடனடி​யாக அமல்​படுத்​து​மாறு பெட்ரோலிய அமைச்​சகம் எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​களுக்கு அனுப்​பிய கடிதத்​தின் நகலை​யும் அமைச்​சர் தனது பதிவுடன் பகிர்ந்​துள்​ளார். முன்​ன​தாக, கடந்த ஜூன் மாதத்​தில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எல்​பிஜி விநி​யோகத்​தில் விதிக்கப்பட்​டிருந்த கட்​டுப்​பாடு​களை மத்​திய அரசு திரும்பப்பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply