தங்கம் பவுனுக்கு ரூ.1,680 உயர்வு

Priya
12 Views
1 Min Read

ஆபரணத்​ தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்​து, ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 440-க்கு விற்​கப்​பட்​டது.

மத்​திய கிழக்​கில் நில​வும் போர் பதற்​றம், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்​பின் நிலை காரணமாக தங்​கத்​தின் விலை கடந்த 16-ம் தேதி வரை ஏற்ற இறக்​க​மாக இருந்​தது. இதன்​பிறகு, படிப்​படி​யாக உயர்ந்து வரு​கிறது.

இதன்​தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் ஆபரணத்​தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்​து, ரூ.1 லட்​சத்து 7 ஆயிரத்து 440-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.210 உயர்ந்​து, ரூ.13,430-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 17 ஆயிரத்து 208 ஆக இருந்​தது.

ஒரு பவுன் தங்​கம் கடந்த 17-ம் தேதி ரூ.1 லட்​சத்து 4 ஆயிரத்து 800 ஆக இருந்​தது. இதன்​மூலம், கடந்த 5 நாட்​களில் மட்​டும் பவுனுக்கு ரூ.2,640 வரை உயர்ந்​துள்​ளது.

நேற்று வெள்ளி கிரா​முக்கு ரூ.5 உயர்ந்​து, ரூ.245 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதி​கரித்​து, ரூ.2 லட்​சத்து 45 ஆயிர​மாக​வும் இருந்​தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply