சமீபத்தில் மக்கள் இடையே தீவிரமாக பரவி வரும் டிஜிட்டல் அரஸ்ட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மக்களிடம் இதற்காக டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு விடுத்துள்ளது. அதில், உங்களிடம் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், அல்லது உயர் தலைவர்கள் என்ற பெயரில் யாராவது பேசினாலோ.. வீடியோ காலில் பேசினாலோ அதை நம்ப வேண்டாம்.
அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் சவுந்தர்யா சமீபத்தில் 17 லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகவும்.. ஒரு கும்பல் தனது பணத்தை மோசடி செய்து பறித்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
போலீசாரிடம் பதியப்பட்ட எப் ஐ ஆர் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன.கடந்த ஓராண்டில், FedEx, DHL, BlueDart, DTDC போன்ற கொரியர் நிறுவனங்களின் பெயரில் நடந்த இந்த மோசடிகளில் பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர். உதாரணமாக சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம் என்று மிரட்டுவார்கள்.
அதன்பின் வழக்கு நடத்த ஜாமீன் வழங்க, விசாரணையை அவர்களின் ஊருக்கு மாற்ற என்று பல காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்து பல லட்சம் பணத்தை ஏமாற்றுவார்கள். இது போன்ற கால்கள் வந்தால் நம்ப கூடாது அதை நம்ப ஏமாற கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.