நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில் உள்ள, விமான நிலையத்திலிருந்து இன்று காலையில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ரன்வேயில் வேகமாக சென்ற டேக் ஆப் ஆகும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக திடீரென தடம் புரண்ட விமானம் விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில் விழுந்த நொறுங்கி, தீப்பற்றி எரிந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் விரைவாக தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ள நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எதிர்பாராமல் நடந்த விபத்தை தொடர்ந்து இன்று முதல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.