எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்: கர்நாடக சங்கீதம் கற்க விரும்பும் ராஷ்மிகா

Priya
2 Views
1 Min Read

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கும் ராஷ்மிகா மந்தனா, அதற்காக கர்நாடக இசை கற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் ராஷ்மிகா கூறும்போது, “நான் கர்நாடக சங்கீதம் கற்க இருக்கிறேன். நான் வெறுமனே பாசாங்கு செய்ய முடியாது. என்னால் உணர்வுகளை கடத்த முடியும். ஆனால், வீட்டில் கூட நான் பாடல்களை முணுமுணுத்தது இல்லை. இப்போது இந்தப் படத்துக்காக நான் பாட விரும்புகிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது. ஆனால், எனக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த கதாபாத்திரத்துக்காக என்னை அணுகியபோது நான் அவர்களிடம் முதலில் இது எனக்கு மிகவும் கடினமான வேடம் எனச் சொன்னேன். அவர்களின் வாழ்க்கை மிகவும் அழகானது. அடுத்த தலைமுறை அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமானது.

ஆனாலும் எனக்குள் இருந்த லட்சியவாதி ‘நீ இதை செய்தே ஆக வேண்டும்’ என்றாள். இப்போது நான் பாடல் என்கிற முற்றிலும் புதிய உலகத்துக்குள் நுழைய வேண்டும். நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாது. இது அற்புதமாகவும் இருக்கலாம் அல்லது ஏமாற்றம் தரலாம். ஆனால் என்னால் இயன்ற அனைத்தையும் நான் செய்வேன்” என்று ராஷ்மிகா கூறினார்.

‘எம்எஸ் – எ லெக்கஸி ஆன் ஸ்க்ரீன்’ என்கிற வாழ்க்கை வரலாற்றுப் படத்தை கவுதம் தின்​னூரி இயக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அல்லு அரவிந்த், பன்​னி​வாசு, ராக்​லைன் வெங்​கடேஷ் ஆகியோர் இணைந்து இப்​படத்தை தயாரிக்​கின்​றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply