பழைய குற்றாலம் அருவியில் பெருமழை காலத்தின் போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தற்போது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக கடந்த 17ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிர் இழந்த நிலையில்,நீண்ட நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது மீண்டும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வனப்பகுதியில் வெள்ளம் வருவதை முன்பே வனத்துறையினர் எச்சரிக்கை விடுக்கும் போது, அருவிக்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாரம் அடித்து எச்சரிக்கும் வகையில் அதிக டெசிபல் ஒலி எழுப்பக்கூடிய அலாரம் மெஷின் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அருவியின் மேல் பகுதியில் வெள்ள கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் எச்சரிக்கும் போது அருவிக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பொதுமக்களுக்கு அபாய ஒலியை எழுப்பி எச்சரிக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.