சென்னையில் வசிக்கும் மக்கள் மின்சார ரயில், மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

“சிங்கார சென்னை” ஸ்மார்ட் கார்டை மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மெஷினில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். அதேபோல், தற்போது அரசு பேருந்துகளில் நடத்துனர்களிடம் இதற்காக ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, நடத்துனர்களிடம் உள்ள ஸ்கேன் மெஷினில் “சிங்கார சென்னை” ஸ்மார்ட் அட்டையை ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

முதல் கட்டமாக 50,000 அட்டைகள் ஸ்டேட் பேங்க் மூலம் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. இன்று முதல் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here