நட்பு, லட்சியத்தை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’

Priya
11 Views
1 Min Read

சேகர் கேசவ் சிரின் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘பீட்சா பாய்ஸ்’. சிவம் சங்​கர் நாயக​னாக நடிக்​கும் இதில் அல்ஃபியா, சரத் லோகிதஸ்வா, ஷோப்​ராஜ், அருள், காக்​காமுட்டை ரமேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் சார்​பில் சங்​கர் கே.என்.மற்​றும் சஹானா சங்​கர் தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு குரு பிரசாத் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இப்​படம் பற்றி இயக்​குநர் சேகர் கேசவ் சிரின் கூறும்​போது, “நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்​தவன். எனது பெற்​றோர் வீட்​டில் தமி​ழில் தான் பேசுவார்​கள். தமிழ் மொழி மீதான காதலால், இந்​தப் படத்தை உரு​வாக்கி இருக்​கிறேன். பெங்​களூரு​வில் தங்​களுக்​கான வாழ்க்​கையை உரு​வாக்க முயற்​சிக்​கும் தமிழகத்​தைச் சேர்ந்த 5 இளைஞர்​களும், அவர்​கள் எதிர்​கொள்​ளும் சவால்​களும்​தான் இப்​படம்.

நட்பு மற்​றும் லட்​சி​யத்தை மைய​மாகக் கொண்ட திரைப்​பட​மாக இது உரு​வாக்​கப்பட்​டிருந்​தா​லும், வேலை​வாய்ப்பு மற்​றும் வாழ்​வாதா​ரத்​தைத் தேடி வேறு மாநிலங்​களுக்​குச் செல்​லும் தமிழக மக்​களின் சிரமங்​களை​யும் இப்​படம் பேசும். பெங்​களூரு​வில் இதன் படப்​பி​டிப்பு நடை​பெற்​றபோது வானிலை சார்ந்த சில சவால்​களைச் சந்​திக்க வேண்​டி​யிருந்​தது. இருப்​பினும், மொத்த படக்​குழு​வினரும் ஒன்​றிணைந்து செயல்​பட்​டோம்” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply