பொது சிவில் சட்டத்தின் நோக்கமே முஸ்லிம் எதிர்ப்புதான்: எம்.ஹெச்.ஜவாஹிருல்லா விமர்சனம்

Priya
12 Views
1 Min Read

‘பொது சிவில் சட்டத்தின் உள்நோக்கமே முஸ்லிம் எதிர்ப்புதான்’ என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் குடிமக்களுக்கு ஒரு பொது சிவில் சட்டத்தைப் பெற்றுத்தர அரசு முயல வேண்டும் என அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வழிகாட்டுகிறது.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை மிக்க நாட்டில், சமத்துவத்தையும் மதச் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் அடிப்படை உரிமைகளோடு இணக்கமாகவே இச்சட்டம் அமைய வேண்டும்.

பொது சிவில் சட்ட விவாதம் பெரும்பாலும் முஸ்லிம்களின் தனிநபர் சட்டங்களைச் சுற்றியே குறுக்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் இது முன்னெடுக்கப்படும் விதம் முஸ்லிம் எதிர்ப்பை உள்நோக்கமாகக் கொண்ட தாகத் தோன்றுகிறது.

இந்து கூட்டுக் குடும்ப அமைப்பின் வரிச் சலுகை உத்தராகண்ட் சட்டத்தில் தொடப்படவில்லை. இந்தச் சட்டத்தை வாரிசுரிமை, பாகப்பிரிவினை, திருமணம் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்க முடியாது.

யாருக்கு உரிமை கிடைக்கிறது என்பதுடன், அந்த உரிமையை எவ்வளவு எளிதாகவும் குறைந்த செலவிலும் பெற முடிகிறது என்பதும் முக்கியம். கணவனை இழந்த பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு, குடும்பத்துக்காக ஊதியமின்றி உழைக்கும் பெண்களின் பங்களிப்பு ஆகியவை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

திருமணத்துக்கு வெளியே இணைந்து வாழும் வயதுவந்தோரின் உறவுகளைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தராகண்ட் சட்டத்தின் பிரிவு, தனியுரிமை குறித்த அரசமைப்புக் கேள்வியை எழுப்புகிறது.

சமத்துவம், கண்ணியம், சுயாட்சி ஆகியவற்றை மதிப் பதே சட்டத்தின் உண்மையான அளவுகோல். இந்தியாவுக்குத் தேவை மத அடையாளங்களை அழிக்கும் சட்டமல்ல; மத, பழங்குடி, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் சமமான உரிமையையும் நீதியையும் உறுதி செய்யும் அரசமைப்புச் சட்ட அணுகுமுறையே.

சட்டமன்றம் வரையறுக்கும், நீதிமன்றம் சோதிக்கும், சமூகம் பங்கேற்கும் அணுகுமுறையில்தான் உண்மையான சீர்திருத்தம் சாத்தியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply