சிம்புதேவனின் ‘நவோரியா’ முதல் தோற்றம் வெளியீடு

Priya
15 Views
1 Min Read

சிம்புதேவனின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சிம்புதேவனின் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நவோரியா’. இந்தப் படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியாகி உள்ளது. அதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

சிம்புதேவனின் முந்தைய படங்களைப் போல இந்தப் படமும் வித்தியாசமான கதை களத்தைக் கொண்டிருக்கும் என எண்ணும் வகையில் இந்த முதல் தோற்றம் உள்ளது.

இந்தப் படத்தில் விமலுடன் ஆரி அர்ஜுன், அன் ஷீத்தல், பாலசரவணன், தம்பி ராமையா, நிழல்கள் ரவி, அப்புகுட்டி வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிசிபி ட்ரீம் ஹவுஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் தாரங் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply