ரூ.1 லட்சத்துக்கும் கீழ் சரிந்த தங்கம் விலை: பவுன் ரூ.99,760-க்கு விற்பனை

Priya
800 Views
1 Min Read

தொடர்ந்து சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஓராண்டுக்குப் பிறகு இன்று (நவ. 17) மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.12,470 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,320-க்கும், ஒரு கிராம் ரூ.12,540-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் ரூ.10,205-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1,34,400 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 25 சதவீதம் வரை விலை சரிந்துள்ளது.

குறிப்பாக, கடந்த நவம்பர் 10-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 வர்த்தக நாட்களில் மட்டும் சவரனுக்கு ஏறக்குறைய ரு.6000 வரை வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் வந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் தங்கம் சார்ந்த முதலீட்டு நிதிகளிலிருந்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வுமே இந்தத் தொடர் விலை சரிவுக்கு முக்கியக் காரணங்களாக பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகிறது.

வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் 4 முதல் 5 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும், நகை வாங்கத் திட்டமிடுவோருக்கு இது ஒரு சிறந்த தருணமாக அமையும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply