எனது போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்பதற்கு ஆதாரம் இருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Priya
700 Views
1 Min Read

தன்​னுடைய போனை பிரதமர் நரேந்​திர மோடி ஒட்டுக்​கேட்​ப​தாகவும் அதற்​கான ஆதா​ரம் தன்​னிடம் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்​றச்​சாட்டை கூறியுள்​ளது அரசியல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது​குறித்து இன்ஸ்டாகிராம் மூலம் நடை​பெற்ற “என்​னிடம் கேளுங்​கள்” நிகழ்ச்​சி​யின்​போது ராகுல் காந்தி கூறிய​தாவது: எனது கையில் உள்ள இந்த போனில் உள்ள தகவல்​கள் அனைத்தும் ஒட்​டுக்​கேட்​கப்​படு​கின்​றன. அதற்​கான அனைத்து ஆதா​ரங்​களும் இந்​தப் போனில் தான் உள்​ளன; பிரதமர் மோடிக்கும் அது நன்​றாகவே தெரியும், ஏனெனில் அவர்​தான் என் போனை ஒட்​டுக்​கேட்​கிறார்” என்​றார்.

மேலும், பல்​வேறு தேசி​யப் பிரச்​சினைகள் குறித்து தம்​முடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த பிரதமர் தயாரா என அவர் மீண்​டும் சவால் விடுத்​துள்​ளார். இருப்​பினும், இந்​தத் தொலைபேசி ஒட்டுக்கேட்​டல் குற்​றச்​சாட்டை உறுதிப்​படுத்​தும் வகை​யில் எத்தகைய சரிபார்க்​கக்​கூடிய தொழில்​நுட்ப ஆதா​ரங்​களை​யும் அவர் வெளியிட​வில்லை.

பெகாசஸ் குற்​றச்​சாட்டு

தமது மற்​றும் பல அரசி​யல்​வாதி​களின் தொலைபேசிகளில் ‘பெகாசஸ்’ மென்​பொருள் மூலம் மத்​திய உளவுத்துறை அமைப்புகள் ஒட்​டுக்​கேட்​ட​தாக ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டிலும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. எனினும், இந்​தத் குற்​றச்​சாட்​டுகளை மத்​திய அரசு திட்​ட​வட்​ட​மாக மறுத்​தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply