‘ஓம்’ படத்தில் ஸ்ரீலீலா கதாபாத்திரம் அறிமுகம்

Priya
798 Views
1 Min Read

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்: சாப்டர் 1’ படத்தில், ஸ்ரீலீலா கதாபாத்திர அறிமுகப் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் – மம்முட்டி நடித்திருக்கும் படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் படத்தில் ஸ்ரீலீலா நடித்திருக்கும் ரோஜா கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை படக்குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், அந்த கதாபாத்திரத்தினை அறிமுகப்படித்தும் ‘செஞ்சுடரே…’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், ‘அவள் அரவணைப்பையும், நளினத்தையும், அன்பையும் கொண்டு வருகிறாள். ‘ஓம்’ படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் செஞ்சுடரே வெளியாகிறது’ என்று தெரிவித்து பாடலை வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கரின் இசையில், குரலில் ஒலிக்கும் பாடல் காதுகளுக்கு இதமூட்டி இதயத்தை வருடுகிறது.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படம் ‘ஓம்: சாப்டர் 1’. எழிலரசு ஒளிப்​ப​திவு செய்து, சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply