இயற்கைச் சீற்றத்தின்போது மக்களின் பாதுகாப்பு அரண் என்எஸ்ஜி படை: ஆளுநர் அர்லேகர் பெருமிதம்

Priya
717 Views
1 Min Read

ஆவடி விமானப்​படை நிலை​யத்​தைச் சேர்ந்த தேசிய பாது​காப்பு படை​யின் (என்​எஸ்ஜி) 27-வது சிறப்பு ஒருங்​கிணைந்த குழு​வினருக்கு பாராட்டு விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பாரதி​யார் மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் கலந்​து​கொண்டு என்​எஸ்ஜி வீரர்​களுக்கு பதக்​கங்​கள் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ்​கள் வழங்கி கவுர​வித்​தார். தொடர்ந்து ஆளுநர் கூறிய​தாவது: நாட்​டின் பாது​காப்​புக்கு அர்ப்​பணிப்​புடன் பணி​யாற்​றும் என்​எஸ்ஜி வீரர்​களின் சிறந்த சேவையை பாராட்​டு​கிறேன்.

உங்​களுக்கு அளிக்​கப்​பட்ட இந்த அங்​கீகாரத்தை ஆளுநராகிய நான் வழங்​க​வில்லை. ஒட்​டுமொத்த தேசம் வழங்​கிய​தாக கருது​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்.

இயற்​கைச் சீற்​றங்​களின்​போதும், எதிர்​பாரா விபத்​துகள் நேரும்​போதும் நீங்​கள் ஆற்​றும் மகத்​தான பணிகளை​யும் சாதனைகளை​யும் எண்ணி மக்​கள் பெரு​மைப்​படு​கிறார்​கள். இக்​கட்​ட​மான நேரங்​களில் மக்​களுக்கு பாது​காப்பு அரணாக இருப்​பவர்​கள் என்​எஸ்ஜி படை​யினர்​தான்.

விபத்து நேரங்​களில் உங்​களின் உடனடி வருகை பொது​மக்​களுக்கு பாது​காப்பு உணர்​வையும் தன்​னம்​பிக்​கையும் அளிக்​கிறது.

என்​எஸ்ஜி பயிற்சி முகாம்​கள் மற்​றும் ராணுவ முகாம்​களுக்கு நான் செல்​லும்​போது பாது​காப்பு படை​யினரின் அர்ப்​பணிப்​பும், கடமையுணர்​வும் என்னை வியக்க வைக்​கும்.

ராணுவத்​தினர், என்​எஸ்ஜி உள்​ளிட்ட பாது​காப்பு படை​யினரின் தியாகத்​தினாலும், அர்ப்​பணிப்பு உணர்​வாலும் நாட்டு மக்​கள் பாது​காப்​பாக வாழ்​கிறார்​கள். அவர்​கள் எவ்​வித பயமும் இல்​லாமல் தங்​களின் அன்​றாட பணிகளை மேற்​கொண்டு வரு​கின்​றனர். இவ்​வாறு ஆளுநர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply