ஒரே இரவில் நடக்கும் ‘மின்னும் ஓர் இரவு’

Priya
751 Views
1 Min Read

இனிகோ பிர​பாகர் முதன்மை வேடத்​தில் நடித்​துள்ள திரைப்​படம் ‘மின்​னும் ஓர் இரவு’. இதில் அஞ்சு கிருஷ்ணா அஷோக், சுப்​பிரமணி​யம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன் உள்​பட பலர் முக்​கிய பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். மருத்​து​வர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி.ராபர்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் தயாரித்​துள்ள இப்​படத்தை சிவபிரபு செல்​வ​ராஜ் இயக்​கி​யுள்​ளார். சுரேஷ்குமார் சுந்​தரம் ஒளிப்​ப​திவு செய்ய பிரணவ் சூரஜ் இசையமைத்​துள்​ளார்.

இப்​படம் குறித்து பேசிய சிவபிரபு செல்​வ​ராஜ், “ஒரே இர​வில் நடக்​கும் க்​ரைம் த்​ரில்​லர் படம் இது. இரவுப் பொழுதை உற்​சாக​மாகக் கடக்​க காட்​டுப் பகுதிக்​குள் செல்​லும் நண்​பர்​கள் மிகப்​பெரிய அதிர்ச்​சிகர​மான சம்​பவங்​களில் சிக்​கு​கின்​றனர். அதி​லிருந்து மீண்​டார்​களா, இல்லையா என்​பதே கதை. நவம்​பர் மாதம் வெளியாகிறது” என்​றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply