புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

Priya
701 Views
1 Min Read

புதிதாக நிர்​யணம் செய்​யப்​பட்​டுள்ள கட்​ட​ணத்​துக்கு ஏற்ப ஆட்டோ மீட்​டரை மாற்ற உரிமையாளர்​கள், ஓட்​டுநர்​களுக்கு 6 மாத அவகாசம் வழங்கி போக்​கு​வரத்து துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இது​குறித்து போக்​கு​வரத்து ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன் வெளி​யிட்ட அறிக்கை: போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தலை​மையில் கடந்த ஜூலை 9-ம் தேதி ஆட்டோ ரிக் ஷா சங்​கங்​கள் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்பு கூட்​டமைப்​பு​களு​டன் கலந்​தாய்வு கூட்​டம் நடத்​தப்​பட்​டது.

அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணம் மறுநிர்​ணயம் செய்ய அலு​வலர் குழு அமைக்​கப்​பட்​டது. ஆட்டோ உரிமையாளர்​கள், ஓட்​டுநர் சங்​கங்​கள், நுகர்​வோர் அமைப்​பு​களின் கருத்​துகள் மற்​றும் பல்​வேறு காரணிகளின் அடிப்​படை​யில் அந்த குழு பரிந்​துரைகளை வழங்​கியது.

அதன் அடிப்​படை​யில் தமிழகம் முழு​வதும் குறைந்​த​பட்ச பயண தூரம் 1.8 கி.மீ.க்கு குறைந்​த​பட்​சக் கட்​ட​ணம் ரூ.50ஆகவும், அதற்கு மேல் ஒவ்​வொரு கி.மீ.க்​கும் ரூ.25, காத்​திருப்​புக் கட்​ட​ணம் நிமிடத்​துக்கு ரூ.1 என நிர்​ணயம் செய்​யப்​பட்​டுள்​ளது.

இரவு நேர கட்​ட​ணம் வழக்​க​மான கட்​ட​ணத்​தின் 1.5 மடங்​கும், மலைப் பாதைக் கட்​ட​ணம் வழக்​க​மான கட்​ட​ணத்​தின் 1.2 மடங்​காகவும் நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆட்டோ உரிமையாளர்​கள், ஓட்​டுநர்​கள் 6 மாத காலத்​துக்​குள் தங்​களது கட்​ட​ண​மானியை (மீட்​டர்) புதிய கட்​ட​ணத்​துக்கு ஏற்​றவாறு மறுசீரமைத்​துக் கொள்ள வேண்​டும்.

அது​வரை போக்​கு​வரத்​துத் துறை இணை​யதளத்​தில் உள்ள கட்​டண அட்​டையை பதி​விறக்​கம் செய்து, பயணிகளின் பார்​வைக்​காக வாக​னத்​தில் வைக்க வேண்​டும்.

ஆட்​டோவில் பார்​வைக்கு வைத்​துள்ள கட்​டண அட்​டை​யில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்​கேன் செய்து, கட்​டண அட்​டை​யின் உண்​மைத்​தன்​மையை பயணிகள் உறுதிப்​படுத்​திக் கொள்​ளலாம்.

போக்​கு​வரத்து துறை​யின் tnsta.gov.in என்ற இணை​யதளத்​தில் கட்​டண அட்​டையை பார்​வை​யிடலாம். அதிக கட்​ட​ணம் குறித்த 1800 425 5430 என்ற எண்​ணில் புகார் தெரி​விக்​கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply