தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்​தி​ய தோல் பொருட்​கள் ஏற்றுமதிக்கு பிரகாச​மான வாய்ப்பு

Priya
583 Views
1 Min Read

மத்​திய அறி​வியல் மற்​றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்​ஐஆர்) 85-வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை அடை​யாறு மத்​திய தோல் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் (சிஎல்​ஆர்ஐ) நேற்று நடை​பெற்​றது.

இதில் மத்​திய அரசின் தொழில் மற்​றும் உள்​நாட்டு வர்த்தக மேம்பாட்​டுத் ​துறை செயலர் அமர்​தீப் சிங் பாடியா பேசி​ய​தாவது: சிஎஸ்​ஐஆரின் கீழ் செயல்​படும் ஆய்​வகங்​களில் ஒன்​றான சிஎல்ஆர்ஐ நிறு​வனத்​தில் ஏராள​மான தோல் ஆராய்ச்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. புதிய தொழில்​நுட்​பங்​களும், புதுப்​புது தோல் பொருட்​களும் உரு​வாக்கப்​பட்டு வரு​கின்​றன.

உலகளவில் தோல் ​பொருட்​கள் தயாரிப்​பிலும், நுகர்​விலும் இந்தியா 2-ம் இடத்​தில் உள்​ளது. ஆனால், தோல் பொருள் ஏற்றுமதியில் 12-ம் இடத்​தில் இருக்​கிறோம். ஐரோப்​பிய நாடுகளுட​னும், இங்​கிலாந்து நாட்​டுட​னும் இந்​தியா தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் (எப்​டிஏ) செய்​துள்​ளது.

இதன் காரண​மாக இந்​தி​யா​வில் தோல்​பொருட்​கள் ஏற்​றும​திக்கு பிர​காச​மான வாய்ப்​பு​கள் உள்​ளன. ஏற்​றும​தி​யில் 12-வது இடத்திலிருந்து 2-ம் இடத்​துக்கு முன்​னேறும் அளவுக்கு நம்​மிடம் திறன்​கள் உள்​ளன என்றார்.

சிஎஸ்​ஐஆர் டைரக்​டர் ஜெனரல் கலைச்​செல்வி தலைமை தாங்கி பேசும்​போது, “சிஎஸ்​ஐஆர் கட்​டுப்​பாட்​டின் கீழ் சிஎல்​ஆர்ஐ உள்பட 37 ஆய்​வகங்​கள் இயங்கி வரு​கின்​றன. 1948-ல் நிறு​வப்​பட்ட சிஎல்​ஆர்ஐ சுதந்​திர இந்​தி​யா​வில் தொடங்​கப்​பட்ட முதல் 10 நிறுவனங்களில் ஒன்று என சிறப்பு வாய்ந்​தது. இந்​நிறு​வனம் தனது ஆராய்ச்சி பணி​கள் மூலம் சிஎஸ்​ஐஆர்-ஐ பெரு​மைபட வைத்​துள்​ளது.” என்​று குறிப்​பிட்​டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply