ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா சார்பில் 3 அம்ச அமைதித் திட்டம்: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தகவல்

Priya
764 Views
1 Min Read

ரஷ்யா-உக்ரைன் இடையே​யான போரை முடிவுக்​குக் கொண்டுவர 3 அம்ச அமை​தித் திட்​டத்தை இந்தியா தயாரித்து அனுப்​பி​யுள்​ளது.

உக்​ரைனுக்​கும், ரஷ்​யா​வுக்​கும் இடையே 4 ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நடந்து வரு​கிறது. போரை நிறுத்த அமெரிக்கா உட்பட பல நாடு​கள் முயன்று வரு​கின்​றன. போரை நிறுத்த ஆக்கப்​பூர்​வ​மான திட்​டங்​களை இந்​தியா வழங்​கி​யுள்​ள​தாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்​தில் தெரி​வித்​திருந்​தார்.

அதே​போல், உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி​யும், இந்​தி​யா​வின் திட்டங்​கள் நடை​முறைக்கு ஏற்​ற​தாக உள்​ள​தாக கூறி​யிருந்​தார். இதனிடையே, போரை நிறுத்த ரஷ்யா மற்​றும் உக்​ரைனுடன் நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாக இந்​திய வெளியுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் தெரிவித்துள்ளார். இந்​நிலை​யில் 3 அம்ச அமை​தித் திட்​டம் ஒன்றைத் தயாரித்து இந்​தியா அனுப்​பி​யுள்​ளது தெரிய​வந்​துள்ளது.

கடந்த மாதம் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கர் உக்​ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்​ற​போது இந்த 3 அம்ச அமை​தித் திட்​டம் குறித்து உக்​ரைனிடம் தெரி​வித்​த​தாக தெரியவந்​துள்​ளது. மேலும், இந்த அமை​தித் திட்​டம் இந்​தி​யா​விட​மிருந்து பெறப்​பட்​டுள்​ளதை உக்​ரைன் வெளி​யுறவு அமைச்​சர் ஆண்ட்ரி சிபிஹா உறு​திப்​படுத்​தி​னார். ரஷ்​யா​வுட​னான போரை முடிவுக்குக் கொண்டு வர துருக்கி, எகிப்து, அமெரிக்கா, இந்தியா ஆகிய 4 சர்​வ​தேச நாடுகளின் முயற்​சிகளில் இந்​தி​யா​வின் திட்டமே மிக​வும் விரி​வானது என்று ஆன்ட்ரி தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply