ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் கூறியதாவது: சவுதி அரேபியாவுக்கு எதிராக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக அதே இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனால் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அவர்களின் இந்த தாக்குதல் சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்பு, நிறுவனங்கள், மக்கள் மற்றும் நமது உறுதியைச் சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும், இப்பகுதியின் மிக வலிமையான நாடாகவும் விளங்கும் சவுதியில், பில்லியன் கணக்கான டாலர்கள் ராணுவத்திற்காக செலவிடப்படுகிறது.
இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் இவ்வளவு உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது. எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ரியாத் விமான நிலையம் மட்டுமல்லாமல், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் ஃபாத் சர்வதேச விமான நிலையமும் குறிவைக்கப்பட்டது.
மேலும், நாட்டின் தெற்குப் பகுதியான காமிஸ் முஷைத் நகரில் உள்ள முக்கிய ராணுவ தளத்தை நோக்கி வந்த ஹவுதிகளின் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது. அவர்கள் முழுமையான போர் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சவுதி தலைமையிலான கூட்டணி உறுதியான பதிலடியை வழங்கும். இவ்வாறு சல்மான் கூறினார்.

