சென்​னை​யில் பைக் ரேஸை தடுக்க 15 தனிப்படைகள் – போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு

Priya
712 Views
1 Min Read

சென்​னை​யில் பைக் ரேஸை தடுக்க 15 தனிப்படைகள் அமைக்கப்​பட்​டுள்​ளன. அந்த தனிப்​படை​யினர் சாதாரண உடை​யில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்ளனர்.

சென்​னை​யில் அண்​ணா​சாலை, கிழக்கு கடற்​கரை சாலை, காமராஜர் சாலை உள்​ளிட்ட முக்​கிய சாலைகளில் இளைஞர்​கள் பைக் ரேஸ் மற்​றும் ஆபத்​தான சாகசங்​களில் ஈடு​படு​வதை தடுக்க போக்​கு​வரத்து போலீ​ஸார் தீவிர நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கின்​றனர். குறிப்​பாக வெள்​ளி, சனிக்​கிழமை​களில் நள்​ளிரவு நேரங்​களில் இளைஞர்​கள் அதிவேக​மாக பைக்​கு​களை ஓட்​டிச் செல்​வதும், வீலிங் உள்​ளிட்ட சாகசங்​களில் ஈடு​படு​வதும் நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், கடந்த 4-ம் தேதி நுங்​கம்​பாக்​கம், வள்​ளுவர் கோட்டம், அண்​ணா​சாலை, சர்​தார்​பட்​டேல் சாலை உள்​ளிட்ட பகுதி​களில் சில இளைஞர்​கள் அதிவேக​மாக பைக்​கு​களை ஓட்டி ஆபத்​தான சாகசங்​களில் ஈடு​பட்​டனர். இதுதொடர்​பாக போக்குவரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் 16 பேரை கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து 11 பைக்​கு​கள் பறி​முதல் செய்யப்​பட்​டன.

மேலும், பைக் ரேஸ், சாகசத்தில் ஈடு​பட்டு தலைமறை​வாக உள்ளவர்​களை​யும் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பொதுமக்களின் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​படுத்​தும் வகையிலும், பொது சொத்​துகளுக்கு சேதம் விளைவிக்​கும் வகையிலும் சாகசங்​களில் ஈடு​படு​பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் சாமுண்​டீஸ்​வரி எச்​சரித்​துள்​ளார்.

மேலும், பைக் ரேஸில் ஈடு​படு​பவர்​களை கைது செய்​வதுடன், பைக்​கு​களை பறி​முதல் செய்​வதற்​காக சென்​னையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சாதாரண உடை​யில் கண்காணிப்​பில் ஈடு​பட்டு நடவடிக்கை எடுக்க தீவிரம்​ காட்​டி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply