விமானப் படை தளபதியாக அசுதோஷ் தீட்சித் நியமனம்

Priya
721 Views
1 Min Read

இந்திய விமானப் படையின் புதிய தளப​தி​யாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய விமானப் படை​யில் தற்​போது தளப​தி​யாக உள்ள ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் அக்​டோபர் 31-ம் தேதி​யுடன் பணிநிறைவு பெற உள்​ளார். இந்த நிலை​யில் புதிய தளப​தி​யாக ஏர் மார்​ஷல் அசுதோஷ் தீட்​சித் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட ‘தேஜஸ்’ போர் விமானங்​கள் மற்​றும் உள்​நாட்டு விமானத் திட்​டங்​களை விமானப் படை​யில் தீவிர​மாக ஊக்​கு​வித்​த​தில் இவர் முக்​கியப் பங்​காற்​றிய​வர்.

மிராஜ்-2000, மிக் ரகங்​கள், கிரண், ஜாகு​வார், ஐஎல்​-78, ஹாக் மற்றும் தேஜஸ் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான போர் விமானங்களில் 3,500 மணி நேரத்​துக்​கும் மேலாகப் பறந்த அனுபவம் கொண்​ட​வர்.

சுமார் நான்கு தசாப்த கால தற்​காப்​புப் பணி​யில், கார்​கில் போரின்​போது நடந்த ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’, ‘ஆபரேஷன் ரக் ஷக்’ மற்​றும் ‘ஆபரேஷன் சிந்​தூர்’ உள்​ளிட்ட முக்​கிய ராணுவ நடவடிக்​கை​களில் இவர் தீவிர​மாகப் பங்​காற்​றி​யுள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply