‘அன்பில் அவன்’ மொத்த ஆல்பமும் ஹிட்!

Priya
921 Views
1 Min Read

கன்னட சினிமா நீங்கலாக, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கதை பிடித்தால் மட்டுமே இசையமைத்து வருகிறார் கோவிந்த் வசந்தா. ஆண்டுக்கு மூன்று படங்களுக்கு இசையமைத்தால், அதில் ஒரு படத்தின் மொத்த ஆல்பமும் ஹிட்டாகிவிடுகிறது.

அந்த வரிசையில் தற்போது ‘அன்பில் அவன்’ ஆல்பத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் கார்த்திக் நேத்தா – சித் ராம் காம்போவில் ஒலிக்கும் ‘கல்லா நிக்கிறியே’ பாடலும் ‘ஆசை வரமே’ என்கிற பாடலும் ஏற்கெனவே டிரெண்டிங்கில் இருக்கின்றன.

பாடல் காட்சிகளில் அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் இணையத்தில் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியாகும் 4 முக்கியமான படங்களில் ‘அன்பில் அவன்’ அதன் இசைக்காகவே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply