நியாய விலை கடைகளில் சன்னரக அரசியை கிலோ ரூ.50-க்கு விற்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Priya
796 Views
1 Min Read

அரிசி விலை அதி​கரித்​துள்​ள​தால், ஆந்​திரா வழி​யில் தமிழகத்​தி​லும் நியாய​விலைக் கடைகளில் சன்​னரக அரிசியை கிலோ ரூ.50-க்கு விற்​பனை செய்ய வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அன்​றாட பயன்​பாட்​டுக்​கான அரிசி விலை கடந்த இரு மாதங்​களில் கிலோவுக்கு ரூ.17 முதல் ரூ.40 வரை உயர்ந்​துள்​ளது.

இந்த விலை உயர்வை சமாளிக்க முடி​யாமல் ஏழை மற்​றும் நடுத்தர மக்​கள் தவித்து வரும் நிலை​யில், அவர்​களின் துயரத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்​காதது ஏமாற்​றம் அளிக்​கிறது.

அரிசி விலை மட்​டுமின்​றி, பருப்பு வகைகள், சர்க்​கரை, வெங்​கா​யம் உள்​ளிட்ட காய்​கறிகளின் விலைகளும் கடுமை​யாக உயர்ந்​துள்​ளன. இதனால், மக்​கள் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அதன் தாக்​கத்தை குறைக்க வேண்​டிய கடமை​யும், பொறுப்​பும் மத்​திய, மாநில அரசுகளுக்கு உண்​டு.

அரிசி ஏற்​றும​திக்கு தடை விதித்​தல், மொத்த வணி​கர்​களின் அரிசி கையிருப்​புக்கு உச்​சவரம்பு நிர்​ண​யித்​தல் போன்ற நடவடிக்​கைகள் மூலம் மத்​திய அரசு உள்​நாட்டு சந்​தை​யில் அரிசி​யின் புழக்​கத்தை அதி​கரித்து விலையை குறைக்க வேண்​டும்.

அதே​போல், மாநில அரசும் அதன் பங்​குக்கு விலைக் கட்​டுப்​பாட்டு நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். ஆந்​திர மாநில அரசை பின்​பற்​றி, தமிழகத்​தி​லும் இலவச​மாக வழங்​கப்​படும் அரிசி தவிர, சன்​னரக அரிசியை கிலோ ரூ.50 என்ற விலை​யில் நியாய​விலைக் கடைகளில் விற்​பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழகத்​தில் அரிசி ஆலைகள் மற்​றும் மொத்த வணி​கர்​களிடம் உள்ள அரிசி​யில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்​முதல் செய்து நியாய​விலைக் கடைகள் மூலம் இந்த திட்​டத்தை தமிழக அரசு செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply