ரஷ்யா​விட​ம் இருந்து எண்ணெய் வாங்​குவதை உடனே நிறுத்த முடியாது: நிர்மலா சீதாராமன் தகவல்

Priya
593 Views
1 Min Read

ரஷ்யா​விட​மிருந்து கச்சா எண்ணெய் வாங்​கு​வதை இந்​தி​யா​வால் உடனடி​யாக நிறுத்த முடி​யாது என்று மத்​திய நிதி அமைச்​சர் நிர்மலா சீதாராமன் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை வாங்​கும் மிகப்​ பெரிய நாடு​களில் ஒன்​றாக இந்​தியா தொடர்ந்து திகழ்​கிறது. இந்நிலையில், ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெயை வாங்​கு​வதைத் தடுக்​கும் பொருட்​டு, ரஷ்யா மற்​றும் ஈரான் மீதான தடைகள் குறித்த லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்​டத்தை அமெரிக்க அரசு அமலாக்​கி​யுள்​ளது.

இதனால் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​கள் மீதான பொருட்​களுக்கு அமெரிக்காவில் 100% வரி விதிக்​கும் அபாயம் உள்​ளது.

இதனிடையே டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் கலந்து​கொண்ட மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறியதாவது: ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை உடனடி​யாக நிறுத்த முடி​யாது. அவ்​வாறு நிறுத்​தி​னால் இந்தியாவில் பெட்​ரோல், டீசல் விலை உயரக்​கூடும்.

ரஷ்யாவுட​னான வர்த்​தகத்தை இந்​தியா நிறுத்​தி​விட்​டு, வேறு எங்கிருந்தாவது எண்​ணெய் வாங்​கலாம் என்று முடிவு செய்யலாம். ஆனால், அப்​படி வெளி​யேறிய உடனேயே, ஏற்​கெனவே குறை​வாக உள்ள விநி​யோகத்​துக்​கான விலை உயரும். இது சந்​தேகத்​துக்கு இடமின்றி ஒரு கடுமை​யான சவாலாக இருக்​கும்.

எனவே, நம் நாட்டின் நலன்​களுக்கே நாம் முன்​னுரிமை அளிக்க வேண்​டும் என்று கருதுகிறேன். நமது நாட்​டின் கச்சா எண்​ணெய் தேவையை பூர்த்தி செய்ய உலகின் எந்​தப் பகு​தியி​லிருந்​தும் கொள்​முதல் செய்ய நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply