ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Priya
638 Views
1 Min Read

ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 112, கூப்பர் கானொலி 78, கேப்டன் மிட்செல் மார்ஷ் 53 ரன்கள் விளாசினர்.

357 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 48.3 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் சிகந்தர் ராசா 45, பிரண்டன் டெய்லர் 39 ரன்கள் சேர்த்தனர். 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply