உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தோமன் குமார், ஷியாம் சுந்தர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 152-139 என்ற புள்ளிகள் கணக்கில் இராக் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் ஹர்விந்தர் சிங், விஜய் சந்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவேக்கியா அணியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் பாவ்னா, பூஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 0-6 என்ற கணக்கில் சீனா அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஷீத்தல் தேவி, பாயல் நாக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீனா அணியிடம் தோல்வி அடைந்தது.

