தமிழில் அறிமுகமாகிறார் ப்ரீத்தி பகதாலா

Priya
548 Views
1 Min Read

ரஞ்​சித் ஜெயக்​கொடி இயக்​கத்​தில் அர்​ஜுன் தாஸ் நடிக்​கும் படத்​தின் தொடக்க விழா பூஜை​யுடன் சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கே.எஸ்​.ரவி​கு​மார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்​வினி நம்​பி​யார், மோனா பெட்​ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். நாயகி​யாக ப்ரீத்தி பகதாலா நடிக்​கிறார். இப்​படம் மூலம் தமிழில் அறி​முக​மாகும் இவர், தெலுங்​கில் பதங், 418 ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார்.

ஷான் ரோல்​டன் இசையமைக்​கிறார். இப்​படத்தை வசந்த் விஜய் எம்​.பி., சண்​முக பிரியன் இணைந்து தயாரிக்​கின்​றனர். பர்​வீன் பானு இணை தயாரிப்​பாள​ராகப் பணி​யாற்​றுகிறார். “உறவு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் இப்​படம், காதல், குடும்ப உணர்​வு​கள், நகைச்​சுவை மற்​றும் வலு​வான கதா​பாத்​திரங்​களை உள்​ளடக்​கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிரா​மா​வாக உரு​வாகிறது” என படக்​குழு தெரி​வித்​து உள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply