முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் உருவாக்கம்: பேரவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

Priya
755 Views
1 Min Read

தமிழ்​நாடு முதலீட்டு ஊக்​கு​விப்பு ஆணை​யத்தை அமைப்​ப​தற்​காக தமிழ்​நாடு வணிக எளி​தாக்​கல் சட்​டத்தை திருத்​து​வது தொடர்​பான மசோ​தாவை சட்​டப்​பேர​வை​யில் தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா நேற்று தாக்​கல் செய்​தார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: 2036-ம் ஆண்​டுக்​குள் தமிழகத்​தின் பொருளா​தா​ரம் 1.5 ட்ரில்​லியன் டாலர் அளவை எட்​டும் வகை​யில், நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள இலக்கை அடைய தமிழ்​நாடு முதலீட்டு ஊக்​கு​விப்பு ஆணை​யத்தை அமைப்​பது அவசி​ய​மாகிறது. இதற்​காக தமிழ்​நாடு வணிக எளி​தாக்​குதல் சட்​டத்தை திருத்த அரசு முடி​வெடுத்​துள்​ளது.

அதன்​படி, தொழில் முதலீட்​டுக்​கான அனு​மதி கோரி ஒற்​றைச் சாளர இணை​யதளம் வாயி​லாக மட்​டுமே விண்​ணப்​பிக்க இயலும். ஆணை​யத்​தின் தலை​வ​ராக தலை​மைச் செயலரும், உறுப்​பினர் மற்​றும் ஒருங்​கிணைப்​பாள​ராக தொழில் துறை செயலரும், 20-க்​கும் மிகாத வகை​யில் உறுப்​பினர்​களும் ஆணை​யத்​தில் இடம்​பெறு​வார்​கள்.

முதலீ்ட்டு ஊக்​கு​விப்பு வசதி​களை ஏற்​படுத்​துதல் தொடர்​பான நடவடிக்​கைகள், திட்​டங்​களை செயல்​படுத்​து​வது, வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வது மற்​றும் ஏற்​றும​தி​களை ஊக்​குவிக்க ஆணை​யம் அனு​மதி வழங்​கும். முதலீட்டு ஊக்​கு​விப்பு மற்​றும் வசதி​களை ஏற்​படுத்​து​வதற்​கான பணி​கள் வழங்​கப்​பட்​டுள்ள அனைத்து முகமை​களின் செயல்​பாடு​களை​யும் ஆணை​யம் கண்​காணிக்​கும்.

முதலீடு​களுக்கு தடை​யாக உள்ள அமைப்பு ரீதியி​லான சிக்​கல்​களைக் கண்​டறிந்து மாநிலத்​தின் முதலீட்டு சூழலை​யும், எளி​தாக தொழில் தொடங்கி நடத்​து​வதை​யும் மேம்​படுத்த கொள்கை உரு​வாக்​குதல் உள்ளிட்ட பணி​களை​யும் மேற்​கொள்​ளும்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply