அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனின் தலைக்கு ரூ.95 கோடி பரிசு: ஈரான் அரசு ஊடக அறிவிப்பால் பதற்றம்

Priya
724 Views
1 Min Read

ஈ​ரான் – அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்​கு, எப்​படிக் கொல்​வது என்​பது குறித்த விவரங்​களு​டன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்​பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளி​யிட்​டுள்​ளது.

மேலும், அவரது தலைக்கு 10 மில்​லியன் டாலர் (ரூ.95 கோடி) பரிசை​யும் அறி​வித்​துள்​ள​தால் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. ஈரானிய தொலைக்​காட்​சி​யின் சேனல் 3-ல் ஒளிபரப்​பான வீடியோ​வில், பாரனின் அன்​றாட நடமாட்​டங்​கள் காண்​பிக்​கப்​பட்​டுள்​ளன. அவர் தீவிரமாகக் கண்​காணிக்​கப்​பட்டு வருவ​தாகக் கூறி​யுள்ள அந்த வீடியோ, அமெரிக்க ரகசி​யப் பாது​காப்​புப் படையை​யும் மீறி ஒரு பெண் பாரனைச் சந்​தித்​த​தாக​வும் தெரி​வித்​துள்​ளது.

“இது தொடக்​கம் மட்​டுமே. பாரன் ட்ரம்ப், எங்​களுக்​காக காத்​திரு” என்ற நேரடி எச்​சரிக்​கை​யுடன் அந்த வீடியோ முடிவடைந்​தது. மெலனியா ட்ரம்பை இலக்கு வைத்​து, ‘மெலனி​யாவை கொல்​வது எங்​கே?’ என்ற தலைப்​பில் ஈரான் அரசு தொலைக்​காட்சி கடந்த மாதம் ஒரு வீடியோவை வெளி​யிட்​டது.

நியூ​யார்க் நகரில் அவர் பயணிக்​கும் வாகன வரிசை மற்​றும் அவர் வழக்​க​மாக செல்​லும் பிரபல ஆடை அங்​காடிகள் அதில் காட்​டப்​பட்​டன. இந்த மிரட்​டலை​யடுத்​து, மெலனியா, பாரன் ஆகிய இரு​வருக்​கும் அமெரிக்க ரகசிய பாது​காப்​புப் படை​யினர் 24 மணி நேர​மும் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply