‘என் எழுத்துகளுக்கு விருது வேண்டும்’ – நோபல் பரிசு ஏமாற்றத்துக்கு பின் புலிட்சர் பரிசை குறிவைக்கும் ட்ரம்ப்

Priya
896 Views
2 Min Read

அமைதிக்​கான நோபல் பரிசு கிடைக்​காமல் ஏமாற்றம் அடைந்த ட்ரம்ப் தனது எழுத்​துகளுக்​காக புலிட்​சர் பரிசு வழங்க வேண்​டும் என வலியுறுத்​தி​யுள்​ளார்.

உல​கின் மிக உயரிய விருதாக கருதப்​படும் அமைதிக்​கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரு​கிறார். உல​கம் முழுக்க நடந்த அல்​லது நடக்க இருந்த 7 போர்​களை தான் தடுத்து நிறுத்​தி​ய​தாகவும், அதற்​காக தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்​டும் என்​றும் கடந்த ஆண்டு அவர் வெளிப்​படை​யாக கேட்​டார். எனினும், கடந்த ஆண்டு வெனிசுலா​வின் எதிர்க்​கட்சி தலைவரான மரியா கொரினா மச்​சாடோவுக்கு அமைதிக்​கான நோபல் பரிசு வழங்​கப்​பட்​டது. இது ட்​ரம்​புக்கு அதிருப்​தியை ஏற்படுத்​தி​யது.

அதேபோல இந்த ஆண்​டும், “நான் 8 போர்​களை முடிவுக்​குக் கொண்​டுவந்​தேன். இந்த உல​கமே ஒட்​டுமொத்​த​மாக அழிந்து போவதைத் தடுத்து நிறுத்​தினேன். எனவே அமைதிக்​கான நோபல் பரிசுக்கு என்னை விட தகுதி​யான நபர் வேறு யாருமே இல்லை” என ட்​ரம்ப் தெரி​வித்​தார். ஆனால், தென் ஆப்​பி​ரிக்க சட்ட நிபுணரும், தமிழ் வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான நவநீதம் பிள்​ளைக்கு 2026-ம் ஆண்​டின் அமைதிக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டது. இத​னால் அதிருப்தி அடைந்த ட்​ரம்ப், ‘நவநீதம் பிள்​ளையை யாருக்​கும் தெரியாது’ என சாடினார்.

இந்​நிலை​யில், தென் கரோலினா மாகாணத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய ட்​ரம்ப், “ரஷ்யா தொடர்​பான விசாரணையை செய்​தி​யாக வெளி​யிட்ட பத்திரிகையாளர்களுக்கு புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்​டது. ஆனால் அவர்​கள் தவறாக புரிந்​து​கொள்​ளப்​பட்​டனர். அவர்​கள் வெளியிட்ட செய்தி அறிக்​கைகள் தவறானவை.

எனது எழுத்​துக்​காக எனக்கு புலிட்​சர் பரிசு கிடைத்​திருக்க வேண்டும். எனக்கு நோபல் அமைதி பரிசும் கிடைக்​க​வில்லை. புலிட்​சர் பரிசும் வழங்​கப்​பட​வில்லை. இருந்​தா​லும், அது குறித்து எனக்கு கவலை இல்லை” எனக் கூறினார்.

புலிட்​சர் பரிசு என்​பது பத்​தி​ரிகை, இலக்​கியம், நாடகம் மற்​றும் இசை ஆகிய துறைகளில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு அமெரிக்கா​வில் வழங்​கப்​படும் மிக உயரிய விருது ஆகும். தனது எந்த குறிப்​பிட்ட படைப்​புக்​காக புட்​லிசர் பரிசு வழங்​கப்​பட்​டிருக்க வேண்​டும் என்​பதை ட்​ரம்ப் தெளிவுபடுத்​த​வில்லை.

வணிகம், அரசி​யல் தொடர்​பாக சுமார் 20 நூல்​களை ட்​ரம்ப் வெளி​யிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. எனினும், அவற்​றில் பல நூல்​கள் இணை ஆசி​ரியர்​கள் மற்​றும் நிழல் எழுத்​தாளர்​கள் உதவியுடன் எழுதப்​பட்​டவை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply