“ஹீமோபிலியா நோயாளிகளுக்கு இலவச மருந்து வழங்க நடவடிக்கை” – அமைச்சர் அருண்ராஜ் உறுதி

Priya
851 Views
1 Min Read

தமிழகத்தில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு, எமிசிஜுமாப் மருந்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, தவெக எம்எல்ஏ எம்.எஸ்.ரவி, “தமிழகத்தில் ஹீமோபிலியா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் (Emicizumab) என்ற மருந்தை இலவசமாக வழங்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அளித்த பதில்: ஹீமோபிலியா என்பது ஒரு அரிய வகை ரத்த உறைதல் குறைபாட்டு நோயாகும். ஃபேக்டர் 8 இன்ஹிபிட்டர் ஆன்டிபாடி உருவாகியுள்ள ஹீமோபிலியா ஏ மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் மருந்து எமிசிஜுமாப். இந்த மருந்து தற்போது இந்திய அரசால் தேசிய சுகாதார இயக்கத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இம்மருந்து இன்ஹிபிட்டர் ஆன்டிபாடி உருவாகியுள்ள ஹீமோபிலியா ஏ மருத்துவப் பயனாளிகளுக்கு ரத்தக் கசிவை தடுப்பதில் குறிப்பிடத்தக்க மருத்துவப் பயன்களை கருத்தில் கொண்டு, இன்ஹிபிட்டர் உடைய ஹீமோபிலியா ஏ மருத்துவ பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.” என்றார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply