60,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு உடனடியாக வழங்க அன்புமணி வலியுறுத்தல்

Priya
704 Views
1 Min Read

தட்​கல் திட்​டப்​படி விண்​ணப்​பித்து காத்​திருக்​கும் 60,120 விவ​சா​யிகளுக்கு உடனடி​யாக இலவச மின் இணைப்பை வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் நிலத்​தடி நீரை கொண்டு பாசனம் செய்​வதற்​காக இலவச மின்​சார இணைப்பு கோரி தட்​கல் திட்​டத்​தின்​படி விண்​ணப்​பித்த 47 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு கடந்த 8 மாதங்​களாக மின்​இணைப்பு வழங்​காமல் மின்​வாரி​யம் தாமதப்​படுத்தி வரு​கிறது.

வறட்​சி​யால் வாழ்​வா​தாரம் இழந்து தவிக்​கும் விவ​சாயிகளிடம் ரூ.1,250 கோடிக்​கும் கூடு​தலாக வசூலித்து கொண்டு இணைப்பு வழங்​காமல் ஏமாற்​று​வது கண்​டிக்​கத்​தக்​கது.

இவர்​களுக்கு முன்​பாக கடந்த 2023-ம் ஆண்​டில் இதே தட்​கல் திட்​டத்​தில் விண்​ணப்​பித்த 12 ஆயிரத்துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகள் ரூ.250 கோடிக்​கும் கூடு​தலாக முன்​பணம் செலுத்​தி​யுள்​ளனர்.

விதி​மீறல் வேளாண் இலவச மின்​சா​ரத்​திற்​கான இணைப்​புக்​காக 60,120 உழவர்​களிட​மிருந்து ரூ.1500 கோடியை வசூலித்​திருக்​கும் மின்​சார வாரி​யம் மின் இணைப்பை வழங்க மறுப்​பது பெரும் அநீதி ஆகும்.

தட்​கல் திட்​டத்​தில் விண்​ணப்​பித்​தவர்​களுக்கு 15 நாள்​களி​லிருந்து 90 நாள்​களுக்​குள் மின் இணைப்பு வழங்​கப்பட வேண்​டும் என்​பது விதி​யாகும்.

விளைபொருள்​களுக்கு நியாய​மான விலை கிடைக்​காதது, வறட்​சி​யால் குறுவை சாகுபடி செய்ய முடி​யாதது, பயிர்க்​கடன்​கள் முழு​மை​யாக தள்​ளு​படி செய்​யப்​ப​டாதது உள்​ளிட்ட காரணங்​களால் விவ​சா​யிகள் ஏற்​க​னவே பெரும் துயரங்​களை அனுப​வித்து வரு​கின்​றனர்.

அவர்​களிடம் ரூ.1,500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்​காமல் அவர்​களுக்கு கூடு​தல் துயரத்தை அரசு வழங்​கக்​கூ​டாது. தட்​கல் திட்​டப்​படி விண்​ணப்​பித்து காத்​திருக்​கும் 60,120 விவ​சா​யிகளுக்கு உடனடி​யாக வேளாண் இலவச மின் இணைப்பை வழங்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply