‘குடும்பத்துக்காக நேரம் செலவிடுவீர்’ – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தல்

Priya
690 Views
3 Min Read

“என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம் நிறைவேறும்” என்று நடிகர் சூர்யா உருக்கமாக பேசினார்.

‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் நடந்தது.

விழாவில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கும் தனக்குமான உறவை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், “என் படத்தின் வசனம் ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அதை சொல்லி ஆரம்பிக்கிறேன். சொந்த ஊருக்காரங்க… இங்கே இருக்கிறதெல்லாம் என்னோட தம்பி, தங்கச்சி, அண்ணன், அக்கா, அத்தை, மாமா… என் சொந்தங்கள். சொந்தங்களே எப்படி இருக்கீங்க!

என் செல்லங்களா… கண்ணுங்களா… என் சாமிகளா… இந்த இசை வெளியீட்டு விழாவை திருவிழா மாதிரி ஆக்கி வைச்சிருக்கீங்க. மிகப் பெரிய அன்பு இது. எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

சில காரணங்களுக்காக என் பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. ஆனாலும் தமிழகம் முழுவதும் நீங்கள் செய்த விஷயங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

5000 பேருக்கும் அதிகமான பேர் ரத்ததானம் பண்ணி இருக்கீங்க. 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உங்களால பயனடைஞ்சுருக்காங்க. இந்த அன்புக்கு ரொம்ப நன்றி.

கோயம்புத்தூர் வந்திருப்பதால் ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக்கிலிருந்து ஆரம்பிக்கலாம். 12-ம் வகுப்பு படிக்கும் வரைக்கும் ஒவ்வொரு விடுமுறையும் கோவையில்தான். கவுண்டம்பாளையத்தில் உள்ள கிராமத்தில்தான் கழியும். போன வருஷம் என் குழந்தைகளை அழைத்து வந்து இந்த புளியமரத்தில்தான் நான் ஏறி விளையாடிய புளிய மரம், குளித்து விளையாடிய கிணறு, குலதெய்வம் கோயில் எல்லாவற்றையும் காட்டினேன்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் அனைவரும் திரைக்கு (செல்போன்) செலவு செய்யும் நேரத்தை குடும்பத்துக்காக செலவு செய்வதில்லை. இனிமேல் அப்படி இருக்க வேண்டாம். நல்ல நினைவுகளை உருவாக்குவோம்.

‘கருப்பு’ படத்துக்கு பிறகு இப்போதுதான் நான் உங்களை பார்க்கிறேன். அதை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக்கிய குட்டீஸுக்கும், பெரியவங்களுக்கும் கட்டிப்பிடித்து நன்றி சொல்கிறேன். அந்தப் படத்துக்கு ஒரு பிரச்சினை வந்தபோது உடன் நின்று உதவிய அத்தனை பேருக்கும் நன்றி. படத்தின் நூறாவது நாள் வரப்போகிறது, அதிலும் சந்திப்போம்.

இன்னைக்கு ஃப்ரெண்ஷிப் டே… என் அன்பான ரசிகர்களுக்கு ஹப்பி ஃப்ரெண்ஷிப் டே. 28 வருஷம் என்னை விட்டுவிடாமல் இந்த இடத்துல நிற்க வைச்சு அழகு பார்க்குங்றீங்க. உங்களால் மட்டும்தான் நான் இங்க நிற்கிறேன். இதெல்லாம் பண்ண முடியுது.

நான் வந்து நிற்கும் இடம் எனக்கு புரிகிறது. எனக்கு கிடைத்த வெற்றி மாதிரியே பல பல மடங்கு வெற்றி உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கும். என்னை இங்கே நிற்க வைச்சு அழகு பார்க்கிற உங்கள் வாழ்க்கையிலும் அதே அளவு வெற்றி கிடைக்க வேண்டும். உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டும். அதற்காக நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த அன்புக்கு ரொம்ப நன்றி’ என்று உருக்கமாக பேசினார்.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழுவினர், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவருக்கும் நன்றி கூறிய சூர்யா, இந்தப் படம் தனக்கு ஓர் அடையாளமாக இருக்கும் என்று கூறினார்.

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்​கர் சல்​மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்​களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார் இந்தப் படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீனா டாண்​டன் உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply