மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் பியூச்சர் வர்த்தகம் நேற்று கணிசமான உயர்வைக் கண்டது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஒப்பந்த விலை பேரலுக்கு ரூ.110 (1.36%) உயர்ந்து ரூ.8,224-ஐ எட்டியது. அதேபோல, செப்டம்பர் மாத ஒப்பந்த விலை பேரலுக்கு ரூ.75 (1%) உயர்ந்து ரூ.7,973-ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையைப் பொறுத்த வரையில், லண்டன் இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்சில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் செப்டம்பர் பியூச்சர்ஸ் விலை 2% உயர்ந்து பேரல் 92.33 டாலராக அதிகரித்தது. நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்சில் டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் விலை 1% அதிகரித்து பேரல் 85.03 டாலருக்கு வர்த்தகமானது.

