வசூல் குவிக்கும் ‘சென்னை லவ் ஸ்டோரி’

Priya
307 Views
1 Min Read

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம், சத்தமில்லாமல் வசூலைக் குவித்து வருகிறது.

ஜூலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான தெலுங்கு படமான ‘சென்னை லவ் ஸ்டோரி’ முதல் 5 நாட்களில் 10 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்பனையாகி, இந்தியா முழுவதும் ரூ.32.73 கோடி வரை வசூல் செய்துள்ளது.

முதல் காதலைப் பற்றி பேசும் இந்த மெலோ டிராமா படத்தை ரவி நம்புரீ இயக்கியுள்ளார். கிரண் அப்பாவரம், கெளரி பிரியா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வாழ்வில் சந்தித்த பிரிவால் மனம் உடைந்து போகும் நிவேதிதா சென்னைக்கு வருகிறாள். அங்கு அவள் சினிமாக்காரனான ஸ்டீவன் சங்கரை சந்திக்கிறாள். எதிர்பாராமல் உருவாகும் அந்த நட்பு மெல்ல காதலாக மாற நிவேதிதாவின் வாழ்வில் மீண்டும் ஒரு திருப்பம் வர, அவள் என்ன முடிவெடுத்தாள் என சொல்கிறது படம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply