‘​காமராஜ்’ திரைப்​படத்தை நாட்டுடைமையாக்​கக் கோரிக்கை

Priya
13 Views
1 Min Read

காம​ராஜரின் வாழ்க்​கைக் கதையைச் சொன்ன ‘காமராஜ்’ திரைப்படத்தை நாட்​டுடமையாக்க வேண்​டும் என்று அப்​படத்​தின் இயக்குநர் ஏ.ஜே.​பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்​பட​மாகத் தயாரித்து வெளி​யிட்​டோம். பலரது பாராட்​டை​யும் பெற்​றது. பெருந்​தலை​வருக்​கான முதல் திரை ஆவணம் அது​தான். அதைத் தயாரிக்க பல்​வேறு தரப்​பிடம் உதவி​யும், வங்​கிக்​கட​னும் பெறப்பட்​டது. அந்​தக் கடனை திருப்​பிச் செலுத்த முடிய​வில்​லை.

‘காந்​தி’ படத்​துக்கு மத்​திய அரசு உதவியது. ‘அம்​பேத்​கர்’ படத்துக்கு மத்​திய அரசும், மகா​ராஷ்டிரா அரசும் ரூ.18 கோடி கொடுத்து உதவின. தமிழக அரசு ‘பெரி​யார்’ படத்​துக்கு உதவியது. அதே போல காம​ராஜரை ஒரு வழி​காட்​டி​யாகக் கொண்​டுள்ள தங்​கள் அரசும் எனக்கு உதவும் என்ற நம்​பு​கிறேன். ‘காம​ராஜ்’ படத்தை நாட்​டுடைமை​யாக்​கி, உலகத் தமிழர்களுக்குச்​ சமர்​ப்​பிக்​கும்​படி வேண்​டு​கிறேன்​” என்​று கூறியுள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply