அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைபாடுகளுக்கு தீர்வு காண 304 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க சுகாதாரத் துறை உத்தரவு

Priya
24 Views
2 Min Read

தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களில் நில​வும் குறை​பாடு​களுக்கு தீர்வு காணும் வகை​யில் 304 சிறப்பு அதி​காரி​களை நியமிக்க வேண்​டும் என்று சுகா​தா​ரத் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக அனைத்து இயக்​குநர்​களுக்​கும் சுகா​தா​ரத் துறை சார்​பில் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களில் நில​வும் குறை​பாடு​களுக்கு தீர்வு காணும் வகை​யில் 304 சிறப்பு அதி​காரி​களை நியமிக்க வேண்​டும். சிறப்பு அதி​காரி​கள் மூலம் மருத்​து​வ​மனை​கள் அளவி​லான குறை​களுக்கு தீர்வு காண வேண்​டும்.

அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும், தங்​களது எல்​லைக்கு உட்​பட்ட மாவட்ட மருத்​து​வ​மனை​களில் உள்ள குறை​பாடு​களை ஆய்வு செய்ய வேண்​டும். அதை, மாவட்ட சுகா​தார அதி​காரி​கள், இணை இயக்​குநர்​கள், மருத்​து​வக் கல்​லூரி டீன்​கள் மூலம் உடனடி​யாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

குறை​களைச் சரி செய்​வதற்கு முன்​னரும், பின்​னரும் எடுக்​கப்​பட்ட புகைப்​படங்​களு​டன் கூடிய விரி​வான அறிக்​கையை அரசுக்கு சமர்ப்​பிக்க வேண்​டும். மருத்​து​வ​மனை​களில் நில​வும் சுகா​தார சீர்​கேடு, குடிநீர் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் குறை​பாடு, பாது​காப்பு மற்​றும் மருத்​துவ உபகரணங்​கள் தட்​டுப்​பாடு​களை கண்​காணித்​து, அதன்​பேரில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

சென்னை அண்ணா சாலை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் இதய​வியல் துறை​யில் முது​நிலை பட்​டப் படிப்பு இல்​லாத​தால், தற்​போதைய நிலை​யில் வெறும் 4 மருத்​து​வர்​கள் மட்​டுமே பணி​யாற்​றுகின்​றனர். தின​மும் 500-க்​கும் மேற்​பட்ட இதய நோயாளி​கள் சிகிச்சை பெறும் இந்த மருத்​து​வ​மனை​யில், 133 தீவிர சிகிச்​சைப் பிரிவு படுக்​கைகள் இருந்​தும், 150 செவிலியர் பணி​யிடங்​கள் மட்​டுமே உள்​ளன.

இதனால், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்​கு​மாறு கோரிக்கை எழுந்​துள்​ளது. எழும்​பூர் தாய் – சேய் நல மருத்​து​வ​மனை​யில் தனி​யார் ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யமர்த்​தப்​பட்ட வார்டு ஊழியர்​கள், பாது​காவலர்​கள் முறை​யாக பயிற்சி பெற​வில்லை என்​றும், சிலர் மாலை நேரங்​களில் வளாகத்​துக்கு உள்​ளேயே மது, போதைப் பொருள் பயன்​படுத்​து​வ​தாக​வும் புகார் வந்​தது.

அதே​போல, மகப்​பேறு வார்​டு​களில் நீண்ட கால​மாகப் பணி​யாற்​றும் ஒப்​பந்த ஊழியர்​கள் சிலர் நோயாளி​களிடம் லஞ்​சம் வாங்​கு​வதும் ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் போதிய உபகரணங்​கள் இல்​லாத​தால், நாள்​தோறும் 3 முதல் 4 நோயாளி​களுக்கு மட்​டுமே எம்​ஆர்ஐ ஸ்கேன் செய்​யப்​படு​கிறது.

அவசர சிகிச்சை தேவைப்​படும் நோயாளி​கள் இதர மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்​பப்​படு​கின்​றனர். நோயாளி​களிட​மும், உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​களிட​மும் தூய்​மைப் பணி​யாளர்​கள், பாது​காப்பு ஊழியர்​கள், உடற்​கூறாய்வு ஊழியர்​கள் என பலரும் பணம் பறிப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

அதே​போல, ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யிலும் இத்​தகைய சூழல் நில​வு​கிறது.

வேலூர் அடுக்​கம்​பாறை அரசு மருத்​து​வ​மனை வளாகத்​துக்​குள் எலிகள், நாய்​கள், பாம்​பு​கள் நடமாடு​வ​தாக​வும் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது. அரசு மருத்​து​வ மனை​களில் நில​வும் இந்த பிரச்​சினை​களை தடுக்​க​வும், நோயாளி​களுக்​குத் தரமான சிகிச்சை கிடைப்​பதை உறுதி செய்​ய​வும் சிறப்பு அதி​காரி​கள்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply