உல​கில் முதல் முறை​யாக வாராந்திர இன்​சுலின் இந்தியாவில் அறிமுகம்

Priya
58 Views
2 Min Read

உலகில் முதல் முறை​யாக வாரத்​துக்கு ஒரு முறை செலுத்​தும் ‘அவிக்​லி’ என்ற இன்​சுலின் ஊசி​யை, நோவோ நார்டிஸ்க் நிறு​வனம் இந்​தி​யா​வில் அறி​முகம் செய்​துள்​ளது.

ரத்​தத்​தில் சர்க்​கரை தேங்​கு​வதைத் தடுத்​து, அதை உடலில் உள்ள செல்​களுக்கு கடத்த உதவும் ஹார்​மோன் இன்​சுலின் ஆகும். டைப் 1 நீரிழிவு அல்​லது தீவிர​மான டைப் 2 நீரிழிவு உள்ள நோயாளி​கள், தங்​களின் இரத்த சர்க்​கரை அளவை ஆரோக்​கிய​மான வரம்புக்குள் வைத்​திருக்க, நாள் ஒன்​றுக்கு ஒரு முறையோ, அல்லது பல முறையோ இன்​சுலின் செலுத்​திக் கொள்ள வேண்டியுள்​ளது.

டென்​மார்க் நாட்​டைச் சேர்ந்த நோவோ நார்​டிஸ்க் என்ற மருந்து நிறு​வனம், ‘டைப் 1’ மற்​றும் ‘டைப் 2’ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரிய​வர்​களுக்​கான உலகின் முதல் வாராந்​திர இன்​சுலின் ‘அவிக்​லி’யை நேற்று முன்​தினம் அறி​முகப்​படுத்​தி​யது. இது, ஆண்​டுக்கு 365 முறை செலுத்த வேண்​டிய இன்​சுலின் ஊசிகளின் எண்​ணிக்​கை​யை, 52 ஆக குறைப்​ப​தன் மூலம் நீரிழிவு நோய் சிகிச்​சை​யில் ஒரு குறிப்​பிடத்​தக்க மாற்​றத்தை ஏற்படுத்​தி​யுள்​ளது.

மேலும் ஊசி செலுத்​திக்​கொள்​வ​தில் உள்ள பயத்​தைக் குறைக்கும். நீரிழிவு நோயாளி​கள் சிகிச்​சையைத் தவறாமல் பின்பற்​று​வதை மேம்​படுத்​தும். தினசரி ஊசி என்ற பயம் காரணமாகவே, இந்​தி​யா​வில் இன்​சுலின் சிகிச்​சையைத் தொடங்கு​வது சராசரி​யாக 7 முதல் 9 ஆண்​டு​கள் வரை தள்​ளிப்​போகிறது.

இந்​தி​யா​வில் சுமார் 10.1 கோடி பேர் நீரிழிவு நோயுட​னும், சுமார் 13.6 கோடி பேர் ஆரம்​பகட்ட நீரிழிவு நிலை​யிலும் உள்​ளனர். மேலும், நமது நாட்​டில் 9 லட்​சத்​திற்​கும் அதி​க​மான மக்​கள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இதனால், இதன் சிகிச்சை பெரும்​பாலும் இன்​சுலின் முறையைச் சுற்​றியே அமைகிறது. அவிக்லி வாரத்​திற்கு ஒரு முறை ‘ஃபிளெக்ஸ் டச் எனப்​படும் பேனா வடிவி​லான கருவி மூலம் செலுத்​தப்பட வேண்டும்.

இந்த எளிமை​யான முறை, சிகிச்​சையைத் தவறாமல் தொடர உதவுவதோடு, ஊசிக்கு பயந்து சிகிச்​சையைத் தொடங்​கத் தயங்கும் நோயாளி​களை விரை​வாக இன்​சுலின் எடுத்துக்கொள்ள ஊக்​குவிக்​கும். இந்தியாவில் இதன் விலை ரூ.261 (70 யூனிட்). உலகின் மிக அதி​க​மான நீரிழிவு நோய் பாதிப்பு கொண்ட நாடு​களில் ஒன்​றாக இந்​தியா விளங்​கு​வ​தால்​ இந்​த அறிமுகம்​ முக்​கியத்துவம் பெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply