லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

Priya
29 Views
2 Min Read

இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்​கெட் அணி​கள் இடையி​லான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் புகழ்​பெற்ற லண்​டன் லார்ட்ஸ் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. கிரிக்​கெட்​டின் தாயகம் என்று அழைக்​கப்​படும் லார்ட்ஸ் மைதானத்​தில் மகளிர் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி நடைபெறவுள்ளது இதுவே முதல்​முறை​யாகும்.

லார்ட்ஸ் மைதானத்​தில் ஆடவர் டெஸ்ட் போட்டி நடத்​தப்​பட்டு 142 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் முதல்​முறை​யாக மகளிர் டெஸ்ட் போட்டி நடை​பெற உள்​ளது. இதனால் இந்த போட்டி வரலாற்று சிறப்பு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக மாறி உள்​ளது. ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்​றுடன் வெளி​யேறிய நிலை​யில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் போட்​டியை சந்​திக்​கிறது.

இங்​கிலாந்​துக்கு எதி​ராக விளை​யாடிய கடந்த நான்கு டெஸ்ட் போட்​டிகளில் மூன்​றில் இந்​திய மகளிர் வெற்றி பெற்​றுள்​ளது. அதோடு, இங்​கிலாந்து மண்​ணில் இது​வரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்​திய மகளிர் அணி தோல்​வியடைந்​தது இல்​லை. இங்கிலாந்து மண்​ணில் இந்​திய மகளிர் அணி 2 வெற்​றி, 7 டிராக்களை பதிவு செய்​துள்​ளது. இதனால் இந்​திய அணி நம்பிக்கை​யுடன் களமிறங்​கு​கிறது.

இந்​திய அணி​யில் தொடக்க வீராங்​க​னை​களாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்​கக்​கூடும். 3-வது இடத்​தில் பிரியா பூனி​யா​வுக்கு வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும். ஹர்​லின் தியோல், ஸ்ரீசரணி, நந்​தினி சர்மா ஆகியோர் அறி​முக வீராங்கனை​களாக களமிறங்​கக்​கூடும்.

இங்​கிலாந்து மகளிர் அணி நாட் ஷிவர்​-பிரண்ட் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அனுபவம் வாய்ந்த தொடக்க வீராங்கனையான டாமி பீமாண்ட், இந்த டெஸ்ட் போட்​டிக்​குப் பிறகு சர்​வ​தேச கிரிக்​கெட்​டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதனால் அவர் மீது எதிர்​பார்ப்பு உள்​ளது.

டெஸ்ட், ஒரு​நாள் போட்​டி, டி20 என மூன்று வடிவி​லான சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளி​லும் சதம் அடித்த இரண்டு இங்​கிலாந்து வீராங்​க​னை​களில் ஒரு​வ​ராக பீமாண்ட் திகழ்​கிறார். 2023-ம் ஆண்டு மகளிர் ஆஷஸ் தொடரில், டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக அவர், 208 ரன்​கள் விளாசி​யிருந்​தார். இதன் மூலம், டெஸ்ட் போட்​டி​யில் இரட்​டைச் சதம் அடித்த முதல் இங்​கிலாந்து வீராங்​கனை என்ற வரலாற்​றுச் சாதனையை அவர் படைத்​திருந்​தார்.

நேரம்​: பிற்​பகல்​ 3:30

நேரலை: ஸ்போர்​ட்​ஸ்​ 18

Share This Article
Leave a Comment

Leave a Reply