ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வாட்ஸ்-ஆப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை தொடக்கம்

Priya
23 Views
1 Min Read

​ராஜீவ்காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் வாட்​ஸ்​-ஆப் மூலம் ஓபி சீட்டு பெறும் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் நேற்று `நலம்​AI’ என்ற பெயரில் வாட்​ஸ்​-அப் சாட்​பாட் சேவை மற்​றும் `மை ஹாஸ்​பிடல் செயலி’ சேவையை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத்துறை செயலர் தாரேஸ் அகமது, மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன் உடனிருந்​தனர். அப்​போது அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

ஆதார் கட்டாயமில்லை

நலம்AI வாட்​ஸ்​-ஆப் சாட்​பாட் சேவை மூல​மாக வீட்​டில் இருந்​த​படியே புறநோ​யாளி​கள் பிரிவு சேவைக்கு ஓபி சீட்டை பெற்​றுக்​கொள்​ளலாம்.

9619222999 என்ற எண்​ணுக்கு hi என்று பதி​விட்​டு, அதில் கேட்​கும் விவரங்​களுக்கு பதில் அளித்​தால் முன்​ப​திவு செய்​யப்​படும். இந்த சேவைக்கு ஆதார் எண்கட்​டாயமில்​லை. மருந்து சீட்​டு, மருத்​துவ அறிக்கை வாட்​ஸ்​-ஆப் மூல​மாக​வும் பெறலாம். இந்த சேவை 22 மாவட்​டங்​களில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

அரசு மருத்​து​வ​மனை​களில் கழிப்​பறை​கள் சுத்​த​மாக இல்லை என்​றால், அங்கு ஒட்​டப்​பட்​டுள்ள க்யூஆர் குறி​யீட்டை செல்​போனில் ஸ்கேன் செய்து மை ஹாஸ்​பிடல் செயலி​யில் புகார் அளிக்​கலாம். உடனடி​யாக கழிப்​பறை சுத்​தம் செய்​யப்​படும். அரசு மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்கு ஆதார் எண் கட்​டாயமில்​லை. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply