ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் – முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Priya
36 Views
1 Min Read

தமிழகத்​தில் வரும் 28-ம் தேதி 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்​குப் போலியோ சொட்டு மருந்து வழங்​கும் முகாம் நடை​பெற உள்​ளது. முதல்​வர் விஜய் இம்​மு​காமைத் தொடங்கி வைக்க உள்​ளார்.

போலியோ (இளம் பிள்ளை வாதம்) முற்​றி​லும் ஒழிக்​கப்​பட்ட நாடாக இந்​தியா உரு​வெடுத்​ததைத் தொடர்ந்​து, கடந்த 6 ஆண்​டு​களாக ஆண்​டுக்கு ஒரு​முறை சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான முகாம் வரும் 28-ம் தேதி காலை 7 மணி​முதல் மாலை 5 மணிவரை நடை​பெறுகிறது

சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் அரசுப் பள்​ளி​யில் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில், முதல்​வர் விஜய் இம்​மு​காமைத் தொடங்கி வைக்க உள்​ளார். தமிழகத்​தில் சுமார் 53 லட்​சம் குழந்​தைகளுக்​குச் சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​காக, மாநிலம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள் மற்​றும் பள்​ளி​கள் என மொத்​தம் 43,051 மையங்​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

பயணத்​தில் இருக்​கும் குழந்​தைகளின் வசதிக்​காகப் பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள், விமான நிலை​யங்​கள் மற்​றும் சோதனைச் சாவடிகளில் சிறப்​புச் சொட்டு மருந்து மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும் எளி​தில் சென்​றடைய முடி​யாத மலைப்​பகு​தி​கள் மற்​றும் தொலை​தூர கிராமங்​களில் வசிக்​கும் குழந்​தைகளுக்​காக நடமாடும் குழுக்​கள் மூல​மாகச் சொட்டு மருந்து வழங்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மாபெரும் பணி​யில் சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி ஊழியர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

இது தொடர்​பாக சுகா​தா​ரத் துறை​யினர் வெளி​யிட்​டுள்ள அறி​வுறுத்​தலில், “குழந்​தைகளுக்கு அண்​மை​யில் சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டிருந்​தா​லும், வரும் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெறும் முகாமில் தவறாமல் மீண்​டும் சொட்டு மருந்து வழங்க வேண்​டும். லேசான காய்ச்​சல் அல்​லது சளி பா​திப்பு உள்ள குழந்​தைகளுக்​கும் தா​ராள​மாகச் சொட்டு மருந்து வழங்​கலாம்​” என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply