ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா..!!

Priya
33 Views
1 Min Read

ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஜார்ஜ் குரியன். இவர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தனது ஒன்றிய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஜனாதிபதி மாளிகை ஏற்றுக்கொண்டது. பாஜக தொடங்கப்பட்டது முதல் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மூத்த தலைவர்களில் ஒருவர். கேரள மாநில அரசியலில் கட்சியின் முக்கியப் பிரமுகராக ஆவார். இதனையடுத்து ஒன்றியஅமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில தேர்தல், ராஜ்யசபா தேர்தல் முடிவுகளுக்காக பாஜ தலைமை காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது தேர்தல்கள் முடிந்த நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply