இன்று இந்த 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை…

Priya
59 Views
1 Min Read

சென்னையை பொறுத்தவரையில் நகரின் ஓரிரு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. அதேபோல, மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply