நாடு முழுவதும் காலியாக உள்ள 9000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வாரியத்தின் உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான பணியாளர் சேர்க்கை என்பது உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முன்னதாக, 5696 எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots – ALPs) பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதற்கான , விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான (RRB Technician Recruitment) சேர்க்கை அறிவிப்பை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. Technician Gr 1 Signal பணியின் கீழ் 1100 காலியிடங்களும், Technician Gr 3 பனியின் கீழ் 7900 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கணிணி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்திய ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெளிவாகக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்…
Ahmedabad www.rrbahmedabad.gov.in
Ajmer www.rrbajmer.gov.in
Allahbad www.rrbald.gov.in
Bangalore www.rrbbnc.gov.in
Bhopal www.rrbbpl.nic.in
Bhubaneshwar www.rrbbbs.gov.in
Bilaspur www.rrbbilaspur.gov.in
Chennai www.rrbchennai.gov.in
Chandigarh www.rrbcdg.gov.in
Gorakhpur www.rrbgkp.gov.in
Guwahati www.rrbguwahati.gov.in
Jammu www.rrbjammu.nic.in
Kolkata www.rrbkolkata.gov.in
Malda www.rrbmalda.gov.in
Mumbai www.rrbmumbai.gov.in
Muzaffarpur www.rrbmuzaffarpur.gov.in
Patna www.rrbpatna.gov.in
Ranchi www.rrbranchi.gov.in
Secunderabad www.rrbsecunderabad.nic.in
Siliguri www.rrbsiliguri.org
Thiruvanthapuram www.rrbthiruvanthapuram.gov.in