தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை.. சென்னைக்கு அலர்ட்.. வானிலை மையம் வார்னிங்!

Priya
711 Views
1 Min Read

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

அதேநேரம் உள் தமிழக பகுதிகளில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply