தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Priya
17 Views
1 Min Read

தமிழகத்​தில் 5 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ராயலசீமா மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களின் மேல் சுமார் 3.1 கிமீ மற்​றும் 4.5 கிமீ உயரத்​தில் வளிமண்டல காற்​றழுத்த சுழற்​சிகள் நில​வு​கின்​றன. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று ஒருசில இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள் மற்​றும் நீல​கிரி, திண்​டுக்​கல், தேனி, சிவகங்கை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். 23-ம் தேதி தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை, இதர தமிழகத்​தில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஓரிரு பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 100 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 82 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும்.

தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் அதனை ஒட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று சூறாவளிக்​காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை வரையி​லான 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தத்​தில் 5 செமீ, சேலம் மாவட்​டம் கரு​மந்​துறை, நாகப்​பட்​டினத்​தில் தலா 4 செமீ, கிருஷ்ணகிரி மாவட்​டம் பாம்​பார் அணை, ஊத்​தங்​கரை, சேலம் மாவட்​டம் வீரக​னூர், கடலூர் மாவட்​டம் காட்​டும​யிலூரில் தலா 3 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply