விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,தற்பொழுது கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்துத் தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் பலரின் பெயர் அடிபட்டாலும், விஜய் சேதுபதி
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாகவும், விரைவில் அந்நிகழ்ச்சிக்கான ப்ரமோஷன் ஷூட் நடக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.