நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘கோட் ‘படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் இன்று வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.